ரணில் விடுத்துள்ள விசேட அறிக்கை! மறுக்கும் மைத்திரி

Report Print Jeslin Jeslin in அரசியல்

அமைச்சரவை அங்கத்தவர்களின் அறிக்கைகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அவற்றை அமைச்சரவைக்குள்ளேயே பேசித் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாமல் அவற்றை வெளியில் பேசுவது அமைச்சரவை விதிமுறைகளை மீறும் நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாகவும் 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அவசரமாக அமைச்சரவையை கூட்டுவோமா என ஜனாதிபதி தம்மிடம் கேட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அதேபோல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக பல்வேறு சிவில் அமைப்புக்களும் தம்மோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்போது ஏனைய கட்சிகளின் ஆதரவு இன்றி அதனை செய்ய முடியாது என தாம் ஜனாதிபதிக்கு கூறியதாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும் நேற்றையதினம் மாத்தளையில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மாவட்ட சம்மேளனத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாம் அண்மையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தை கூட்டுமாறு பிரதமருக்கு கூறவில்லை என ஜனாதிபதி என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.