ஜனாதிபதி வேட்பாளராக மக்களை சந்திக்கும் அநுரகுமார

Report Print Thirumal Thirumal in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிமுகம் செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக மக்களை சந்திக்கும் நிகழ்வு இன்று ஹட்டனில் இடம்பெற்றது.

ஹட்டன் பேருந்து நிலையத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக மலையக சகோதரத்துவ இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பு குழு தலைவர் மஞ்சுள சுரவீர, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்னண் செல்வராஜ், எழுத்தாளர் என்டனி ஜீவா, விரிவுரையாளர் விஷ்வநாதன் சதாநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலையக பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.