தில்ருக்ஷி விக்ரமசிங்க தொடர்பில் உரிய விசாரணை - தலதா அத்துகோரள

Report Print Steephen Steephen in அரசியல்

தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவருடன் உரையாடிய போது கூறியதாக வெளியாகியுள்ள விடயம் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துமாறு நீதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபரிடம் கோரியுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பூகொடையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தில்ருக்ஷி விக்ரமசிங்க அரச சேவை ஆணைக்குழுவின் கீழ் பணியாற்றும் அதிகாரி. இது சம்பந்தமான உரிய விசாரணை நடத்துமாறு நீதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் கோரியுள்ளார்.

அந்த அமைச்சர் யார் என்பது பற்றிய தகவலை வெளியிட வேண்டும். இது ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டது என நான் நினைக்கின்றேன்.

இதனால், அந்த அமைச்சர் யார் என்பதை அவர் கட்டாயம் வெளியிட வேண்டும். அமைச்சர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றாலும் பொறுப்புக் கூற வேண்டிய அரச அதிகாரிக்கு இவ்வாறு செய்ய முடியாது எனவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

அவன்கார்ட் வழக்கில் கோத்தபாய ராஜபக்சவை சம்பந்தப்படுத்துமாறு தனக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தில்ருக்ஷி விக்ரமசிங்க, அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதியிடம் கூறும் தொலைபேசி உரையாடல் ஒன்றை சேனாதிபதி வெளியிட்டிருந்தார்.