சஜித்தை ஓரம்கட்ட நடக்கும் மிகப் பெரிய சதி! உச்சக்கட்ட ஆதங்கத்தில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க எடுத்த முயற்சியானது மிகவும் மோசமான செயல் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பாக தாம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எமது பலத்த எதிர்ப்புக்கு பின்னால் அந்த கோரிக்கை கைவிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த முயற்சியானது ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் விரும்பும் வேட்பாளரை முறியடிக்கும் நாசகார செயல் என தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.