மைத்திரியின் சாதனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சர்வதேசம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஹெட்ரிக் சாதனையை இன்று இலங்கையும் சர்வதேசமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் திறப்பு விழாவின்போது நிர்மாணத்துக்கான 2 பில்லியன் ரூபா முறைக்கேடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

துபாயில் பேர்ஜ் கலீபா கோபுரம் திறக்கப்பட்டபோது துபாயின் ஆட்சியாளர் இவ்வாறான உரையை ஆற்றவில்லை மலேசியாவில் பெட்ரோனெஸ் கோபுரத்தை திறக்கும்போது மலேசியாவின் ஜனாதிபதி இவ்வாறான உரை எதனையும் நிகழ்த்தவில்லை.

எனினும் சீனாவின் நிதியுதவியிலான கோபுரத்தை திறந்து வைத்தபோது அந்த நாட்டுக்கு எதிராகவே ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்த கருத்து சீனாவை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை குறிவைத்து மைத்திரி அரசியலில் வீழ்த்திய முதலாவது விக்கட்டாக இது அமைந்துள்ளது.

இந்தவிடயம் தொடர்பான கதை மறையும் முன்னரேயே இரண்டாவது விக்கட்டையும் மைத்திரி வீழ்த்தி விட்டார்.

அதுவே நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வகையிலான அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியமையாகும். இதில் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விக்கட்டை வீழ்த்தி விட்டார்

தற்போது அவர் வீழ்த்தப்போகும் மூன்றாவது விக்கட் யாருடையது. அந்த ஹெட்ரிக்கை அவர் அடைவாரா? என்பதை இலங்கையும் சர்வதேசமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.