ரணில் விரும்பினால் நான் தயார்! சற்று முன்னர் சபாநாயகர் கரு அதிரடி

Report Print Jeslin Jeslin in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒருமித்த சவாலாக தன்னிடம் ஒப்படைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற ரணில், சஜித் மற்றும் கரு ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் பிளவுகளை உருவாக்கும் எண்ணம் தனக்கு இல்லை. எந்தவொரு பிரிவினையும் இல்லாமல் பிரதமரின் தலைமையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சவாலை கட்சிக்கு ஒப்படைத்தால், அதை ஏற்றுக்கொண்டு கட்சி சார்பாக எந்த தயக்கமும் இல்லாமல் செயற்படுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் மிகவும் ஆற்றல் வாய்ந்த இளைஞன். கட்சியில் சஜித்துக்கு தெளிவான எதிர்காலம் உள்ளது. அது நிச்சயம். நாங்கள் பிளவுகளை உருவாக்கத் தேவையில்லை. என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.