ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரித்து வவுனியாவில் தீவிர பிரச்சார நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியாவின், பூவரசன்குளம், கோயில் மோட்டை, சிவன்நகர், புலவனூர் ஆகிய கிராமங்களில் இப்பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான தர்மபால செனவிரட்ன தலைமையிலான, பொதுஜன பெரமுனவை சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.