ஐ.தே.கட்சி தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் - சந்திரிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என தான் பிரார்த்திப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான விடயத்தில் அனைவருக்கும் பித்து பிடித்து போயுள்ளனர் எனவும் சந்திரிக்கா கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேட்பாளர் கூட முன்மொழிப்படவில்லையே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி,

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த இரு அணிகளில் ஒரு அணி அதில் இருந்து வெளியேறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்பட்டு போயுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...