விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது?

Report Print Yathu in அரசியல்

கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணம் என்பவற்றுக்கு என்ன நடந்தது என தென்னிலங்கையில் வாழும் மக்கள் மத்தியிலும் கேள்வி நிலவுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - முறிகண்டி பிரதேசத்தில், முறிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. மக்கள் குடிக்க நீர் இல்லாமலும், உணவு இல்லாமலும் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

கடந்த 10 வருடங்களில் வீதியையும், புகையிரதத்தையும் மாத்திரம் அபிவிருத்தியாக செய்து விட்டு மக்களை அபிவிருத்தி பாதைக்குள் அழைத்து சென்றுள்ளதாக கூறுகின்றனர்.

உண்மையில் இவ்வாறான செயற்பாடுகள் நாளாந்தம் நாம் செய்யும் செயற்பாடுகள் போன்றவை. அதற்காக நாம் அதனை அடிக்கடி சொல்லிக்காட்டிக் கொள்வதில்லை.

அது போன்று தான் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளும். ஆனால் என்றோ ஒருநாள் செய்த அபிவிருத்தியை இன்றும் சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள்.

இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவருக்கும் விருப்பம் இல்லை. பிரச்சினைகள் இவ்வாறு தொடர்ந்தால் தான் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்பது அவர்களின் சிந்தனை.

இறுதி யுத்தத்தின் போது அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் மக்களிற்கு மீள கையளிக்கப்பட்ட தங்கங்களின் மிகுதிக்கு என்ன நடந்தது என்பதை தென்னிலங்கை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விடுதலை புலிகளின் வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது. அவற்றில் கொஞ்ச நகைகளை கொடுக்கப்பட்டன. மிகுதி தங்கத்திற்கு என்ன நடந்தது என்று தெரியாது.

எவ்வளவு தங்கம், பணம் மீட்கப்பட்டது என்பது ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரியாது. எல்லோரும் தத்தமது அரசியலை பாதுகாக்கவே முற்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...