சஜித் பிரேமதாசவை நான் ஆதரிக்கவில்லை - திஸ்ஸ அத்தநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்

வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவை தாம் ஆதரிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சஜித்திற்கு தாம் ஆதரவளிப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், தமது நிலைப்பாடு எதிர்வரும் புதன்கிழமையின் பின் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவி வரும் ஸ்திரமற்ற நிலைமையை கருத்திற் கொண்டு தாமும் தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...