கட்சி பிளவடைவதினை தவிர்க்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைவதனை தவிர்க்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கௌரவமான முறையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட கூடிய வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு ரணிலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்களினால் இந்த கோரிக்கை ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை குறித்து ரணில் முதல் தடவையாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது தேர்தல் ஒன்றுக்கு செல்லாது ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு மேற்கொள்ளப்படும் என ரணிலுக்கு ஆதரவான அமைச்சர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் நடத்திய சந்திப்பின் போதும் இந்த விடயங்கள் குறித்து விரிவாக கலாந்தோசிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.