ஸ்தம்பித நிலையை அடைந்துள்ள நாடு! எஸ்.பி.திஸாநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்

நாடு ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியும், பிரதமரும் மோதிக் கொள்ளும் ஸ்திரமற்ற அரசாங்கத்தை அமைப்பதில் பயனில்லை.

தாமரை கோபுரம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து பொய்யானது என அம்பலமாகியுள்ளது.

ராஜபக்சக்களுக்கும், சீனாவிற்கும் இழிவினை ஏற்படுத்துவதற்கே இதனை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான முரண்பாடுகள் நீடித்தால் நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கி நகரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers