அமைச்சரின் பெயரை தில்ருக்ஸி வெளிப்படுத்த வேண்டும்! ஜனாதிபதி கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தாம், கோடிட்டிருந்த அமைச்சர் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

எவன்காட் ஆயுதக்களஞ்சிய நிறுவனப் பணிப்பாளர் நிசங்க சேனாதிபதியுடன் தில்ருக்ஸி தொலைபேசியின் ஊடாக மேற்கொண்ட உரையாடலை சேனாதிபதி தமது பேஸ்புக்கின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் தில்ருக்ஸி, சேனாதிபதியின் நிறுவனம் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும் இது செம்மைப்படுத்தப்பட்ட குரல் பதிவு என்று கூறியுள்ள தில்ருக்ஸி, சேனாதிபதியை தம்முடன் பேசுமாறு அமைச்சர் ஒருவர் வழிகாட்டியதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அந்த அமைச்சர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இதனை கோடிட்டே ஜனாதிபதி தமது கோரிக்கையை விடுத்துள்ளார்.

அந்த அமைச்சர் யார் என்பதை தில்ருக்ஸி வெளியிட வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுள்ளார்.

மாத்தளையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Latest Offers