ஒரே மேடையில் தோன்றவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

2019ஆம் ஆண்டில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.

மார்ச் 12 இயக்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

ஒக்டோபர் 5ஆம் திகதி சுகததாஸ உள்ளக அரங்கில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

இதற்காக ஜனாதிபதி வேட்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் ஐந்து முக்கிய விடயங்களுக்கான தீர்வுகள் குறித்து விளக்கங்கள் கோரப்படவுள்ளன.

இதேவேளை தேர்தல்களில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் இதுவரை காலமும் ஒரே மேடையில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this video

Latest Offers