சாய்ந்தமருது மீனவர்கள் ஆறு நாளாகியும் வீடு திரும்பவில்லை!

Report Print Rakesh in அரசியல்

மாளிகைக்ககாட்டுத் துறையில் இருந்து கடந்த 18.09.2019ம் திகதி மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் இயந்திரப் படகு ஆறு நாட்களாகியும் இதுவரை கரை திரும்பவில்லை.

சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) , காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்தனர் என்று தெரிவித்த குடும்பத்தினர் அவர்களின் வருகைக்காக பெரும் அவாவுடன் காத்திருக்கின்றனர்.

இவர்கள் பற்றிய தகவல்களைப் பொலிஸ், கடற்படை ஆகியோருக்கும் குடும்பத்தினர் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் கடந்த ஐந்து நாட்களாக தேடுதல் வேட்டையை முன்னெடுத்து வருகின்றது.