கோத்தபாயவுக்கு மாற்றீடாக களத்தில் இறங்குகிறாரா அஜித் நிவாட் கப்ரால்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தபாய ராஜபக்ஸவிற்கு எவ்விதத் தடையும் இல்லை என தாம் முழுமையாக நம்புவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாற்று வேட்பாளராக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக Economy Next இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

வேட்பாளராவதற்கான தகைமை கோத்தபாய ராஜபக்ஸவிற்குக் காணப்படாவிட்டால், அஜித் நிவாட் கப்ராலை வேட்பாளராக அறிவிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்களை மேற்கோள் காட்டி Economy Next இணையத்தளம் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள அவர், அஜித் நிவாட் கப்ரால்,

கட்சியின் வேட்பாளராவதற்கு மாற்று யோசனை முன்வைப்பது தேவையற்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தபாய ராஜபக்ஸவிற்கு எவ்விதத் தடையும் இல்லை என நான் முழுமையாக நம்புகிறேன்.

அவரின் வெற்றிக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தகவல் வெளியிட்டிருந்த Economy Next இணையத்தளம் கப்ரால் வேட்பாளராவதற்கு பொருத்தமானவர் என மகாநாயக்க தேரர்களும் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் பிரேரித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.