தோல்வி உறுதியானதா? கோத்தபாயவை சிறையில் அடைக்க சதி

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் பாரிய தோல்வி ஏற்படும் என அறிந்த ஐக்கிய தேசிய கட்சி, கோத்தபாயவை சிறைப்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எப்படியாவது கோத்தபாய ராஜபக்சவை சிறைக்கு அனுப்பி அவரை ஜனாதிபதி தேர்தலிலிருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவரது ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தடுக்க ஒருவராலும் முடியாது.

தகுதிகளை நன்கு ஆராய்ந்த பின்னரே நாங்கள் ஜனாதிபதி வேட்பாளரை நியமித்தோம். எங்களுக்கு தெரியும் கோத்தபாயவை சிறைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

தோல்வி பயத்தில் சிறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏன் இவ்வளவு பயம்? மக்களுடன் இருந்தால் போட்டியிட்டு மக்களின் கருத்திற்கு மதிப்பளிக்க பழகுங்கள்.

எனினும் அவர்களால் அதனை செய்ய முடியாதென்று எங்களுக்கு தெரியும். அவர்களின் மிகப்பெரிய தோல்வியை யாராவும் தடுக்க முடியாதென மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.