ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக தெரியவருகிறது.
இருவருக்கும் இடையில் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சந்திப்பில், சஜித் பிரேமதாஸவிற்கு முடியுமானளவு ஆதரவை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி ஆலோசித்து, வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் மற்றும் தவிசாளர் கபீர் ஹசிம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.