அடுத்த வருடத்தில் இருந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சஜின் வாஸ் வழக்கு

Report Print Gokulan Gokulan in அரசியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தொடக்கம் இந்த வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சஜின் வாஸ் குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் 30 கோடியே 62 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தெரிவித்து சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.