மகிந்தவின், முன்னாள் முக்கியஸ்தர் சஜித்துடன் இணைவு

Report Print Jeslin Jeslin in அரசியல்
880Shares

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுத செனவிரத்ன இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டே தான் இந்த முடிவினை எடுத்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய தரப்பினருக்கு வாக்களிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நாடு சின்னாபின்னமாக ஆகக்கூடிய நிலை இருப்பதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.