மகிந்த தரப்பிலிருந்து அரசியலில் களமிறங்குகிறேனா..? முரளிதரன் கூறும் விடயம்

Report Print Jeslin Jeslin in அரசியல்
312Shares

அரசியலில் ஈடுபடும் திட்டம் கிடையாது என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

முரளிதரன் மலையகத்தின் ஊடாக அரசியல் பிரவேசம் செய்ய இருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பில் எமது செய்திச் சேவை முரளிதரனுடன் தொடர்பு கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசியலில் தாம் ஈடுபடப் போவதில்லை எனவும் சில தரப்பினர் வதந்திகளை தொடர்ந்தும் கிளப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் நலன்களை ஈட்டிக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு சில தரப்பினர் போலிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக முத்தையா முரளிதரன் எமக்குத் தெரிவித்தார்.

தமக்கு அரசியலில் நாட்டமில்லை எனவும் அரசியலுக்கு வரப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு முரளிதரன் எமக்கு தெரிவித்தார்.