மஹிந்தவின் முக்கியஸ்தரின் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்திய அமைச்சர் சந்திராணி

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

தனது குடும்ப வாழ்க்கையில் அமைச்சர் சந்திராணி பண்டார பிளவினை ஏற்படுத்தியுள்ளதாக மஹிந்த அணியின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். மேலும் கூறுகையில்,

தான் பொதுஜன பெரமுனவிலிருந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றுள்ளதாக அமைச்சர் சந்திராணி பண்டார சில சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், ஊடகங்களின் மூலமாகவும் தெரிவித்தமை எனது குடும்ப வாழ்க்கையில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி மாறியமை தொடர்பில் எனது குடும்பத்தில் மகனும், மனைவியும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் தான் எனக்கு குடும்ப வாழ்க்கையில் விளைவுகளை சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குரிய பொறுப்பை சந்திராணி பண்டார ஏற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராக இருக்கும் வரைக்கும் சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக முடியாது என்பதை தான் உறுதியாக கூறுவதாகவும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.