கோத்தாவை சந்திக்க கோரிக்கை விடுத்த சுமந்திரன்! பசில் கூறும் தகவல்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

வடக்கு, கிழக்கு மக்கள் இம்முறையும் ஏமாற்றமடையக்கூடாது. ஒருமுறை எங்களுடன் கைகோருங்கள். எமக்கு அதில் நம்பிக்கை உள்ளது. நீங்கள் அச்சம், சந்தேகம் இன்றி வாழும் சூழலை உருவாக்குவோம் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அபிவிருத்திகள் செய்யப்படும். அனைவரதும் சிவில் உரிமை பாதுகாக்கப்படும். ஊழல் மோசடி அகற்றப்படும். கடந்த ஆட்சிக்காலங்களில் நாங்கள் விட்ட குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும்,

கேள்வி - கோத்தபாயவும் சுமந்திரனும் சந்தித்து பேச்சு நடத்தியதாக கூறப்படுகின்றதே?

பசில் - சில காலத்திற்கு முன்னர் பேச்சு நடத்தியிருந்தார்கள்.

கேள்வி - என்ன பேசப்பட்டது?

பசில் - அவர் சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதனால் சந்திப்பு நடந்துள்ளது.

கேள்வி - யார் சந்திக்க வேண்டும் என்று கோரியது?

பசில் - சுமந்திரன்

கேள்வி - ஏன் என்று தெரியுமா?

பசில் - கோத்தபாய ராஜபக்ச அனைத்து தரப்பினருடனும் திறந்த மனதுடன் பேச வேண்டும் என்ற கொள்கை உள்ளவர். அதனால் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கேள்வி - வடக்கு, கிழக்கு பகுதிக்கு நீங்கள் சென்று அந்த மக்களின் தேவை என்ன என்பது குறித்து ஆராய்ந்து பார்ப்பீர்களா?

பசில் - நான் நிச்சயமாக செல்வேன். அத்துடன் மகிந்த ராஜபக்ச மற்றும் எமது வேட்பாளர் ஆகியோரும் வடக்குக்கு சென்று மக்களுடன் உரையாடுவார்கள்.

கேள்வி - உங்கள் தரப்பு வெற்றிபெற்றால் அடுத்த ஆடசியில் பசில் ராஜபக்சவின் வகிபாகம் என்ன?

பசில் - தற்போது என்ன செய்கிறேனோ அதனை செய்வேன். ஜனாதிபதி மற்றும் பிரதமரது பணிகளுக்கு உதவுவேன்.

கேள்வி - பதவிகளை பெற மாட்டீர்களா?

பசில் - அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.