ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

Report Print Jeslin Jeslin in அரசியல்
1770Shares

ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் ஒதுங்கியிருக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலேயே கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களைத் தவிர்த்து வருகிறார்.

தேர்தலுக்கு முன்னதாக அவருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஊடகங்களிடம் இருந்து விலகியிருக்குமாறு, கோத்தபாய ராஜபக்சவுக்கு, சட்டவாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களுக்கு நெருக்கமான ஒருவர். ஆனால் நீதிமன்ற வழக்குகளால் அவர் ஊடகங்களில் இருந்து விலகியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.