அடுத்தமாதம் முதல் விசாரணைக்கு வரும் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கை எதிர்வரும் மாதம் விசாரணை செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதிமோசடி வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் அமைச்சராக பதவிவகித்த 6 வருடகாலத்தில் ரூபாய் 75 பில்லியன் மதிப்பிலான அரசநிதி மற்றும் சொத்துக்களை சட்டவிரோதமாக கையாடல் செய்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இன்றையதினம் குறித்த விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.