சஞ்சய் ராஜரட்ணம் பதில் மன்றாடியார் நாயகமாக நியமனம்

Report Print Ajith Ajith in அரசியல்

சிரேஸ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரட்ணம் பதில் மன்றாடியார் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச்சேவைகள் ஆணைக்குழு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள எவென்காட் ஆயுதக்களஞ்சிய பணிப்பாளர் நிசங்க சேனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடினார் என்ற குற்றச்சாட்டில் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள தில்ருக்ஸ் விக்ரமசிங்கவுக்கு பதிலாகவே சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.