பிரித்தானிய பொதுநலவாயத்துறை ராஜாங்க அமைச்சர் டாரிக் அஹமட் பிரபு இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்கனவே அவர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தார். இந்த சந்திப்புக்களின்போது அரசியல் நிலவரங்கள், சமாதானம், பாதுகாப்பு உட்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதேவேளை பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் இலங்கையில் வர்த்தக சமூகத்தினர் மற்றும் சிவில் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.