தேர்தல் தொடர்பான உயர்மட்ட ஆராய்வு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்

Report Print Mubarak in அரசியல்
35Shares

தேர்தலுக்கு முந்திய மதிப்பீட்டை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள அமெரிக்க சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவனத்தின் தூதுவர் கார்ல் இன்டர்பேத் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றுள்ளது.

தேர்தல்களின் போது இலங்கையில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்து இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் தேர்தல் தொடர்பான விபரங்கள் மக்களின் செயற்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும், மக்களுக்குமுள்ளான தொடர்பு நிலை போன்ற விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.