மகிந்தவுக்கும் கோத்தபாயவுக்குமிடையிலுள்ள புரிந்துணர்வு! வெற்றியின் பின்னரான திட்டம்

Report Print Murali Murali in அரசியல்
103Shares

உலகின் பலம் வாய்ந்த அமைப்பான விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கான தலைமையை, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில், மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் காணப்படும் புரிந்துணர்வு காரணமாக நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கோத்தபாய ராஜபக்ச கொழும்பை மிகவும் சுத்தமானதும், அழகானதுமான நகரமாக மாற்றியமைத்தார். அவருக்கு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த தெளிவான பார்வையொன்று உண்டு.

அதனைப் புத்திஜீவிகள் பலரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான தலைமையை வழங்கினார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கிடையில் சிக்கல்கள் எதுவுமின்றி நாட்டை நிர்வகிக்க வேண்டுமெனின் அவர்களுக்கிடையில் சிறந்த புரிந்துணர்வும், ஒற்றுமையும், தோழமையுணர்வும் காணப்பட வேண்டும்.

அந்த வகையில், கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் அந்த அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்சவே இருப்பார். அவர்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வின் காரணமாக நாட்டையும் சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.