வெளிப்படையாக பதில் வழங்குவாரா சஜித்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தன்னுடன் இருக்கும் ஊழல்வாதிகள் தொடர்பில் சஜித் பிரேமதாச வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு வேண்டுகோள்விடுத்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

வீடு கட்டும் போது பாரியளவு நிதியை விளம்பரத்துக்கு செலவு செய்வது, அரசியல் லாபம் தேடி கலாசார நிதியத்தின் நிதியை பகிர்ந்தளிப்பது, அர்ஜுன் மஹேந்திரனை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல் என்பன ஊழல் மிக்க செயற்பாடுகளாகும்.

ரிசாட் பதியுதீன் சஜித்துடன் உள்ளார். அவர் பரிசுத்தமானவரா? ரவி சஜித்துடன் உள்ளார். ரணில், ரவி, மலிக் சமரவிக்ரம ஆகியோரே மத்திய வங்கி திருட்டை வழிநடாத்தியவர்கள். இவர்கள் சஜித்துடன் அல்லவா இருக்கின்றார்கள். இதற்கு சஜித் பதிலளிக்க வேண்டும் என்றார்.