“நாட்டின் பொலிஸ் துறையானது ஒழுக்கமான சமூகத்தையும், பாதுகாப்பான நாட்டையும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனினும், அரசியல் தலையீடுகள் காரணமாக அண்மையில் பொலிஸ்துறை வீழ்ச்சி கண்டுள்ளதாக” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மறைந்த விஜய குமாரதுங்க நிறுவிய இலங்கை மகாஜன காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“வீழ்ச்சி கண்டுள்ள பொலிஸ் துறையை, தேவையான பயிற்சி அளிப்பதன் மூலமும், நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும், குறைகளைத் தீர்ப்பதன் மூலமும் மாற்றியமைக்கமுடியும்.
பொலிஸ் படையை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதும், பொதுமக்களுக்கு அவர்கள் மூலம் திறமையான சேவையை வழங்குவதும் எங்கள் நோக்கம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.