மைத்திரியுடனான சந்திப்பில் பேசியது என்ன? சஜித் பிரேதமாச வெளியிட்டுள்ள தகவல்

Report Print Murali Murali in அரசியல்
213Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தேர்தல் குறித்து கவனம் செலுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம் மற்றும் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார்.

“ஜனாதிபதியுடனான சந்திபின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து கவனம் செலுத்தவில்லை. சமகால அரசியல் நிலவரம் மற்றும் நாட்டின் நிலைமை குறித்தே பேசியிருந்தோம்.” என கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எனினும், பேச்சுவார்த்தை தொடர்பிலான அழைப்பிற்கு சுதந்திர கட்சி இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.