ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று மூன்று பேர் செலுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் ஏ.எஸ்.பி லியனகே, சுயாதீன வேட்பாளர் சமரவீர வீரவந்தி, சுயாதீன வேட்பாளர் அசோக வடிகமங்காவ ஆகியோரே அந்த மூவருமாவர்.

இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியவர்களில் 10 பேர் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், 10பேர் சுயாதீன வேட்பாளர்களுமாவர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் எதிர்வரும் 6ம் திகதி (ஞாயிறுவரை) கட்டுப்பணத்தை செலுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.