ஜனாதிபதியானதும் ஏற்படுத்தப் போகும் முதல் மாற்றம்! சஜித் வழங்கிய உறுதிமொழி

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி மாளிகைகளை ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை என, ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மக்கள் சேவையில் ஈடுபடும் ஜனாதிபதி ஒருவருக்கு மாளிகை அவசியம் இல்லை. அவற்றினை நடத்தி செல்வதற்கு பொது மக்களின் பணத்தை பயன்படுத்துவது தவறான செயலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி மாளிகைகளை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றுவதே தனது எதிர்பார்ப்பு என அவர் கூறியுள்ளார்.

அது மாத்திரமின்றி ஜனாதிபதி பதவிக்காக சம்பளம், கொடுப்பனவுகள் ஒன்றும் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என மாதாந்த சம்பளத்தில் நாட்டு மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக செயற்படுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் தற்போதும், தனது அமைச்சிற்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எதனையும் பெற்றுக்கொள்வதில்லை என்பதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச சொத்துக்களை பாதுகாப்பதே தனது முதல் கொள்கை என சஜித் உறுதியளித்துள்ளார்.