எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாளை நான் கட்டுப்பணம் செலுத்துவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடாவிட்டால் நான் நிச்சயமாக கட்டுப்பணம் செலுத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.