கோத்தபாய ராஜபக்சவுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு செல்ல உள்ளார்.

கோத்தபாயவின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.