சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாச முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் இந்த அறிவிப்பினை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை பிரதமர் ரணில் அறிவித்துள்ளார்.