ஒன்றரை மாதங்களில் தீர்வு! ஐ.தே.கவை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை

Report Print Sujitha Sri in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் பல்வேறு சிக்கல், முரண்பாடுகள் ஏற்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சிக்குள் பிளவுகள் ஏற்படாமல் மிகத்தெளிவான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சுதந்திரத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பல கட்சிகளுக்குள் இன்று பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறல்ல.

இந்த வெற்றிக்காக நாம் நிபந்தனைகள் இன்றி பணியாற்ற வேண்டும். பல வருடங்களின் பின் எமக்கு ஆட்சியதிகாரம் கிடைத்தாலும் எம்மால் செயற்பட முடியாமல் போனது.

இன்று ஒன்றரை மாதங்களில் அதற்கானத் தீர்வு கிடைக்கப் போகின்றது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை ஐக்கிய தேசியக் கட்சியை முன்னிலைப்படுத்தி உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.