எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க தமிழ் கட்சிகள் தயாராக வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பல்வேறுப்பட்டவர்கள் போட்டியிடவுள்ள நிலையில் தமிழ் மக்கள் சார்பிலும் ஒரு பிரதிநிதி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்குரிய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
எனவே, தமிழ்த் தேசியம் சார்ந்த அனைத்து கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.