கோத்தபாய மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு புஸ்வானம் ஆகின்றதா?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்

நிறைவேற்று அதிகார அதிபர் என்பதால் அந்த அதிபர் தனக்குரிய அதிகாரத்தின் கீழ் / வீட்டோ கோத்தபாயவுக்கு குடியுரிமை கொடுத்துள்ளார் என்ற விவாதம் முன்வைக்க ஒரு இடமுண்டு என மூத்த அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் வரைந்துள்ள கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை கைதியை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் பாவ மன்னிப்பு அளித்து அந்தக் கைதியை விடுதலை செய்ய அதிகாரம் இருக்குமானால். இந்த நாட்டில் 30 ஆண்டுகள் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் பல உயிர் சேதங்களை உண்டுபண்ணி அரச சொத்துக்களை அளித்து, குண்டுகளை வைத்து, மத போதகர்கள் மற்றும் பல விளைவுகளை செய்து வந்த தமிழ் விடுதலைப் புலிகளை அளிக்க கொடிய யுத்தத்தை ஒழிக்க இந்த நாட்டுக்கு இராணுவ அனுபவமிக்க முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் அதிலும் விசேடமாக வடக்கில் இராணுவ சேவையாற்றிய ஒருவரை இந்த நாட்டில் வாழ்ந்த ஒருவரை இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த தனது நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமை கொண்ட முன்னாள் இலங்கை பிரஜை கோத்தபாய ராஜபக்சவுக்கு இரட்டை பிரஜவுரிமை வழங்கியுள்ளார் .

கோத்தாபாய ராஜபக்சவுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கியதன் மூலமாக மிகப்பெரிய படைபலம் கொண்ட இந்திய ராணுவத்தால் வெற்றி பெற முடியாத விடுதலைப்புலிகளின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த நாட்டுக்கு கோத்தாபாய ராஜபக்சவுக்கு அளப்பெரிய சேவை செய்துள்ளார்.

கோத்தாபாய ராஜபக்சவை புலிகள் தங்கள் தற்கொலை குண்டுதாரியினால் கொலை செய்த முயற்சி செய்த போது மயிரிழையில் அப்போது தப்பினார் இதோ அதற்கான ஆவணம் ஆதாரமாக.

இந்த நாட்டுக்கு மிக அவசியமான ஒருவருக்குத்தான் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கோத்தாபாய ராஜபக்சவுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கி அவரது சேவை மூலமாக இந்த நாடு யுத்தமில்லாத அமைதி கண்டுள்ளது.கோத்தாபாய ராஜபக்சவின் ராணுவ வெற்றியை வல்லரசு நாடுகள் இன்னும் பாராட்டி வருகின்றது.

இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், இலங்கையின் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை கோத்தாபய ராஜபக்ச பெற்றுக் கொண்டது சட்டவிரோதம் என்றும், அவை செல்லுபடியற்றது எனவும் இந்த மனுவில் சொல்லபட்டதானது கேலிக் கூத்தான விடயம் எனவே வழக்கை தள்ளுபடி செய்து வழக்கு செலவுடன் என் கட்சிக்காரருக்கு நஷ்டஈடு வழங்குமாறு மன்றை கட்டளை இடுமாறு வேண்டுகின்றேன்.

இந்த துரும்பு சீட்டை முன்வைத்து வெள்ளிக்கிழமை விவாதம் நடக்க ஒரு வாய்ப்புள்ளது.அதாவது சட்டமா அதிபர் கையில் ஒரு வாய்ப்பு உள்ளது.

சட்டமா அதிபர் வழக்கை சறிக்கி / தவற விட மிக அதிக வாய்ப்பு. அவர்கள் அனேகமாக சரிக்கட்டப்பட்டிருப்பார் என்று எடுத்துக் கொள்வோமா?

ஆனாலும் அங்கு கோத்தபாயவின் விண்ணப்பப் படிவம் இல்லை என்கின்ற போது அது குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தவறு என்றும் அதற்கான பொறுப்பு அவரே என்றும் அதற்கு கோத்தபாய பொறுப்பல்ல என்றும் ஒரு காரணி உள்ளது .

அந்தக் கட்டுப்பாட்டாளர் இறுதியாக ஜனாதிபதி மைத்திரியின் செயலராக இருந்து ஓய்வு பெற்றிருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.