தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடக நிலையம் நாளை திறந்து வைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடக நிலையம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் விடயங்களை வெளியிடும் வகையில் இந்த நிலையம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் 24 மணித்தியாலங்கள் தமது சேவையை மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையத்திற்கென விசேட தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.