சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் கோத்தபாய ராஜபக்ச சந்திப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடாகியுள்ளது.

இன்று இரவு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் வீரக்குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன ஆகியோரே இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது புதிய தேர்தல் தொகுதிகள், விகிதாசார முறை தேர்தல், தேசியக்கொள்கைகள் உட்பட்ட பல விடயங்கள் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.