கூட்டமைப்பு நிபந்தனை விதித்ததா? சஜித் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

தம்மை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எவரிடம் இருந்தும் ஆதரவைப் பெறுவதற்காக நிபந்தனைகளுக்கு இணங்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளும் விதிக்கவில்லை. நிபந்தனைகளுக்கு அடி பணியும் நபர் நான் அல்ல என்று முன்னரே தெளிவாக கூறியிருக்கிறேன்.

மற்ற கட்சிகளுடன் கொள்கை ரீதியான உடன்பாடுகள் மட்டுமே உள்ளன, நிபந்தனைகள் இல்லை. எனது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் எவரது ஆதரவையும் வரவேற்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.