தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் ஆரம்பித்து வைப்பு

Report Print Arivakam in அரசியல்

கிளிநொச்சி - பாரதிபுரத்தில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆரம்பித்து வைத்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் சிபாரிசிற்கு அமைவாக நடைபெற்ற அபிவிருத்திப்பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் திட்ட முன்மொழிவுகளுக்கமைய கரைச்சி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதிக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் கடந்த 01ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகியுள்ளன.

இதன் முதற்கட்டமாக கடந்த 02ம் திகதி பாரதிபுரத்தின் மிக முக்கிய வீதியும், அதிகளவு மக்கள் பயன்பாட்டைக்கொண்டதும் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலும் இருந்த சி.எஸ்.ஐ வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியானது நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க நல்லிணக்க அமைச்சின் 10 மில்லியன் ரூபா நிதியுதவியில் அமைக்கப்படவுள்ளதுடன், 01 மில்லியன் ரூபா செலவில் பாரதிபுரம் ஆதவன் விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தினை அழகுபடுத்தலுக்கும் மின்னொளி ஊட்டுவதற்குமான வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், உறுப்பினர்கள் சுப்பையா, ஜீவன்,லோறன்ஸ், வண பிதா றமேஸ், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers