நாட்டு மக்களுக்கு சஜித் பிரேதாச இன்று வழங்கியுள்ள உறுதிமொழி!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், சமூக உடன்படிக்கைக்கு சென்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உதியளித்துள்ளார்.

அத்துடன், நாட்டுக்கு பொருத்தமில்லாத, பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒப்பந்தத்திலும் நானோ ஐக்கிய தேசிய கட்சியோ கைச்சாத்திடப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி சம்மேளனம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட கூட்டம் சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “1993ம் ஆண்டு எனது தந்தை ரணசிங்க பிரேமதாச உயிரிழந்த பின்னர் அந்த பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சி 2019ம் ஆண்டு எனக்கு வழங்கி இருக்கின்றது.

எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பை எனது உயிருக்கும் மேலாக கருதி நிறைவேற்ற பாடுபடுவேன். நான் இந்த இடத்துக்குவர கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விட்டுக்கொடுப்பும் பொறுமையுமே காரணமாகும்.

அவரின் இந்த தியாகத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அத்துடன், சபாநாயகர் கருஜயசூரியவின் தியாகத்தையும் இந்த நேரத்தில் நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் ஆதரவுடன் நான் ஜனாதிபதியானவுடன் நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தியில் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத புரட்சிகரமான மாற்றத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

எவ்வாறாயினும், எமது அரசாங்கத்தில் குடும்ப ஆட்சியை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். எனது தந்தையின் வழியிலே எனது பயணத்தை மேற்கொள்வேன்” என அவர் உறுதியளித்துள்ளார்.