சஜித் பிரேமதாசவிற்கு வெட்கம் இல்லையா? மகிந்த தரப்பு தாக்கு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமக்கு எதிராக போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்தல் களத்தில் இருந்து வெளியேற்ற அர்த்தமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சஜித் பிரேமதாசவிற்கு வெட்கம் இல்லையா என நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இக்கேள்வியை எழுப்பியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாட்டின் அரசியல்வாதிகள் சிலருடன் கலந்துரையாடுவது பிரச்சினைக்குரிய விடயமாகும்.

கோத்தபாவிற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது ராஜித சேனாரத்ன சஜித்தின் தேர்தல் மேடைக்கு ஏறி வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து பேசியுள்ளார்.

மேலும் கோட்டாபயவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு சூழலை மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியவற்றை பார்க்கும் போது திங்கட்கிழமை அளவில் பல விடயங்கள் நடந்திருப்பதாகவும் அதேபோல் நீதியமைச்சரும் ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ள ஒருவரை சிறைக்கு அனுப்பி தேர்தலில் போட்டியிட முடியாதவாறு செயற்படுகிறார்கள்.

இதன் மூலம் இவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதம் புலப்படுகிறது. தமக்கு எதிராக போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்தல் களத்தில் இருந்து வெளியேற்ற அர்த்தமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சஜித் பிரேமதாசவிற்கு வெட்கம் இல்லையா.

எவ்வாறாயினும் நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இன்று அல்லது நாளையாகும் போது கோத்தபாய ராஜபக்ஷக்காக மீண்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டி ஏற்படும்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கண்டு எதிர்வரும் 7 ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்றார்.