மஹிந்த தரப்புக்கு மைத்திரியால் அனுப்பப்பட்ட முக்கிய தகவல்!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுஜன பெரமுன கட்சிக்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் சின்னத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான நிலைப்பாட்டினை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விசேட கடிதம் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜப்கசவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிடும் போது,

தாமரை மொட்டு சின்னத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தடைகள் உள்ளதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சட்ட ஆலோசனை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.