ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று விடுத்துள்ள உத்தரவு

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த முன்னாள் காலி மேயர் மெத்சிறி சில்வா இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.