கோத்தபாய போன்ற ஜனாதிபதி வேட்பாளர் எவரும் உலகில் கிடையாது!

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச போன்ற ஒர் வேட்பாளர் உலகிலேயே கிடையாது என பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

உலகில் மிகவும் அழுத்தங்களையும், தடைகளையும் எதிர்நோக்கும் ஒரே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூறுகின்றது.

அது ஓர் வகையில் உண்மையானது ஏனெனில் உலகில் இந்தளவு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட எவரும் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது.

அச்சமற்ற கோத்தபாய என பிரச்சாரம் செய்யப்பட்டாலும் கோத்தபாய வழக்குகளுக்கு அஞ்சுகின்றார், அதனால்தான் வழக்கு விசாரணைகள் நடைபெறும் போது நோய்வாய்ப்படுகின்றார். வெளிநாடு செல்கின்றார்.

மோசடிகள், குற்றச்செயல்கள் தொடர்பில் பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இதனை அழுத்தமாகவோ, நெருக்குதலாகவோ நோக்கப்படக் கூடாது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குத் தொடர்வதனை எம்மால் தடுக்க முடியாது. நாம் எவருக்கும் அஞ்சவில்லை என மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.