மக்களுக்கு தொடரும் நெருக்கடி! அமைச்சர் மங்கள விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

ரயில் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டும் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் தொடர்ந்தும் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரயில் ஊழியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக அவர் நிதியமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் இறுதிக் காலப்பகுதியில் தேர்தலை இலக்காக கொண்டு சரியான முறைகளை பின்பற்றாமல் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யாமல் அந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2010ஆம் ஆண்டளவில் கடந்த அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச மட்டத்டதில் மனித உரிமை மீறல்உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் எந்தவொரு நாட்டுடனும் பொருளாதார ரீதியிலோ அரசியல் ரீதியிலோ கூட்டு ஒத்துழைப்பை கட்டியெழுப்ப முடியாத நிலைஏற்பட்டது.

அப்போது காணப்பட்ட முறையற்ற நிதி பயன்பாடு காரணமாக 2015ஆம் ஆண்டளவில் இந்த நாடு பெரும் கடன் சுமையுடன் தற்போதைய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரச நிதிக்கட்டமைப்பை பலவீனப்படுத்தும் அனைத்து விடயங்களையும் இல்லாமல் செய்து வருமானம் மற்றும் கடன் முகாமைத்துவத்தை பலப்படுத்துவதற்குரிய தொலை இலக்குடன் கூடிய முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.